உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி மும்முரம்

சேதமடைந்த நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி மும்முரம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் பகுதியில், காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் உத்திரமேரூர், காஞ்சிபுரம், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.மாங்கால் சிப்காட்டுக்கு செல்லும் தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், இச்சாலை வழியே தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில், போக்குவரத்து நிறைந்த இச்சாலை, கடந்த வடகிழக்கு பருவ மழையின்போது, சேதமடைந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, முதற்கட்டமாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணியில், வந்தவாசி நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை