உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரி நீரில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரி நீரில் மூழ்கி தொழிலாளி பலி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், சிறுமேனிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 26. கூலி தொழிலாளி.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தென்னேரி ஏரிக்கு வலை மூலம் மீன் பிடிக்க மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்தாக கூறப்படுகிறது. ஏரிக்குள் வலை விட சென்ற மணிகண்டன், சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். மணிகண்டன் வீடு திரும்பாதது குறித்து, சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தென்னேரி ஏரிக்கு சென்று தேடினர்.அப்போது, அவரது உடலை மீட்டெடுத்தனர். இதுகுறித்து, மணிகண்டனின் சகோதரர் தேவராஜ் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ