உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி, திருவள்ளூரில் 11 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

காஞ்சி, திருவள்ளூரில் 11 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளூரில், 11 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து, டி.ஐ.ஜி.,தேவராணி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் சரகத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் செயல்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், சிலரை பணியிட மாற்றம் செய்தும், காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கு புதிய பணியிடம் வழங்கியும் 11 காவல் ஆய்வாளர்களுக்கு, டி.ஐ.ஜி., தேவராணி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவுக்கு நாகராஜன், சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு பாலச்சந்திரனும், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வடிவுக்கரசியும், காஞ்சி தாலுகா காவல் நிலையத்திற்கு ராஜா என்பவரும், பெருநகர் காவல் நிலையத்திற்கு சக்திவேல் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ