தொழில்நுட்ப தேர்வு 147 பேர் ஆப்சென்ட்
காஞ்சிபுரம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுக்கு, 147 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், மணிமங்கலம், மாங்காடு ஆகிய மூன்று தேர்வு மையங்களில், 221 பேர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டனர். இதில், 74 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதம், 147 பேர் தேர்வு எழுதவில்லை.