மேலும் செய்திகள்
டேக் வாண்டோ போட்டி காஞ்சி வீரர்களுக்கு 28 பதக்கங்கள்
29 minutes ago
லிப்ட் கொடுத்து வழிப்பறி செங்குன்றம் வாலிபர் கைது
31 minutes ago
கொலை வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு
39 minutes ago
மண்டலாபிஷேகம் நிறைவு விழா
40 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளில், 15 கி.மீ., நீர்வரத்து கால்வாய்கள் துார்வாரப்படாததால், மழைநீர் சேகரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'அரசு நிதி ஒதுக்காத நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும்; தனியார் நிறுவனங்களிலும் மீண்டும் கையேந்த முடியாது' என, நீர்வளத்துறை அதிகாரிகள் விரக்தியில் புலம்புகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள்; ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகள் என மொத்தம், 761 ஏரிகள் உள்ளன. இதுதவிர, செய்யாறு, பாலாறு, வேகவதி ஆறு என, மூன்று ஆறுகள் உள்ளன. இதில், 25 கி.மீ., துாரம் ஏரி நீர்வரத்து கால்வாய், 45 கி.மீ., துாரம் போக்கு கால்வாய்கள் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவமழைக்கு நிரம்பும் ஏரி உபரி நீர், ஆற்று வெள்ள நீரில், மாவட்டத்தில் இருக்கும் சிற்றேரி, பெரிய ஏரி, தாங்கல், குளம், குட்டை உள்ளிட்ட நீராதாரங்கள் நிரம்பி வருகின்றன. பராமரிப்பு இல்லை இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 45,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இருப்பினும், ஏரி நீர்வரத்து கால்வாய், போக்கு கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள், விவசாய பயன்பாட்டிற்கு நிலங்களாக மாற்றி இருப்பதால், பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, வேகவதி ஆற்றங்கரையோரம் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் மீண்டும் துளிர் விட துவங்கியுள்ளன. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் ஏரியில் இருந்து, உபரி நீர் தென்னேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் குறுக்கே, விவசாய பயன்பாட்டிற்கு மடக்கிய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வந்தனர். பல இடங்களில் வீடு உள்ளிட்ட கட்டடங்களையும் கட்டியுள்ளனர். பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பருவமழை காலங்களில், மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை நீர்வளத்துறையினர் மீட்டனர். முறையாக பராமரிக்காததால், கால்வாய்கள் ஆங்காங்கே துார்ந்து கிடக்கின்றன. விவசாயிகள் புலம்பல் உதாரணமாக, காஞ்சிபுரம் தாலுகாவில், கூரம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய், வாலாஜாபாத் தாலுகாவில் தென்னேரி, அவளூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் துார்வாரப் படாமல் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் தாலுகா எடையார்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய், உத்திரமேரூர் தாலுகா மலையாங்குளம் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் உள்ளிட்ட பல்வேறு நீர்வரத்து கால்வாய்களில், 15 கி.மீ.,க்கு முறையாக துார்வாராததால், மழைக்காலத்தில் ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது என, விவசாயிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது: ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், நீர்வரத்து கால்வாய்கள் மூலமாக, பிரதான ஏரிகள் நிரம்புவதற்கு முன், ஒரு காலங்களில் கால்வாய் அமைத்தி ருந்தனர். இதுதவிர, கம்பன் கால்வாய் மூலமாக பல்வேறு ஏரிகளுக்கு நீர்வழித்தடங்களை ஏற்படுத்த உள்ளனர். அனைத்தும் நீர்வளத்துறையின் பராமரிப்பு இன்றி, துார்ந்து கிடக்கிறது. இதை நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கா ஞ்சிபுரம் நீர்வளத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி மார்க்கண்டன் கூறியதா வது: ஏரி நீர்வரத்து கால்வாய், போக்கு கால்வாய்களை துார்வார, நீர் வளத்துறையில் தனியாக நிதி ஒதுக்குவதில்லை. இருப்பினும், ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியில், உபரி நிதியை பயன்படுத்தி, முக்கியமான இடங்களில் கால்வாய் கள் துார்வாரி வருகிறோம். ஏற்கன வே, ஊரக வளர்ச்சித்துறை ஏரிகளை தனியார் தொழிற்சாலைகளின் பங்களிப்பு நிதியில் சரி செய்துவிட்டோம். அதனால், தனியார் தொழிற்சாலை நிர்வாகங்களின் உதவியை மீண்டும் நாட முடியவில்லை. இவ் வாறு அவர் கூறினார்.
29 minutes ago
31 minutes ago
39 minutes ago
40 minutes ago