பட்டாசு கடைக்கு 19 பேர் விண்ணப்பிப்பு
காஞ்சிபுரம், தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, பட்டாசு கடை நடத்துவோர், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 55 கடைகள் நிரந்தர பட்டாசு உரிமம் பெற்று ஏற்கனவே இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகைக்காக தற்காலிகமாக சிலர் அனுமதி வாங்குவர். அந்த வகையில, மாவட்டம் முழுதும், தற்போது வரை 19 பேர் தற்காலிகமாக பட்டாசு கடை நடத்த வேண்டி, 'ஆன்லைனில்' விண்ணப்பம் செய்துள்ளனர்.பட்டாசு கடை நடத்தப்படும் இடத்தின் பாதுகாப்பு, விதிமுறைகள் பின்பற்றுகின்றனரா என, பல்வேறு துறை அதிகாரிகள் சான்றளித்த பின், தற்காலிக கடை நடத்த வருவாய் கோட்டாட்சியர் அனுமதி வழங்குவார்.