உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காஞ்சியில் 19,051 பேர் விண்ணப்பம்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காஞ்சியில் 19,051 பேர் விண்ணப்பம்

காஞ்சிபுரம்: கா ஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,545 ஓட்டுச்சாவடி முகாம்களில், இரு நாட்களாக நடந்த வாக்காளர் பட்டியல் முகாமில், பெயர் சேர்க்க 19,051 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2.74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 11.26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2026 ஜனவரி 1ம் தேதியை, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவைக்கு வாக்காளர்கள் விண்ணப்பங்கள் அளிக்கலாம் எனவும், மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகு திகளில், 1,545 ஓட்டுச்சாவடிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் விண்ணப்பங்களை அளிக்க தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, ஓட்டுச்சாவடி மையங்களில், கடந்த 27, 28ம் தேதிகளில், 1,545 ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. வாக்காளர்கள் பலரும் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம், 6ஐ பூர்த்தி செய்து, ஆவணங்கள் இணைத்து வழங்கினர். அதன்படி, 19,051 பேர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். அதேபோல, இறந்தவர்களின் பெயர்களை நீக்க, 133 பேரும், முகவரி மாற்றம் செய்ய 5,680 பேரும் விண்ணப்பம் அளித்துள்ளனர். கடந்த இரு நாட்கள் நடந்த முகாம்களில், மூன்று வகையான விண்ணப்பங்களை, 24,864 பேர் அளித்துள்ளனர். வாக்காளர்கள் நேரடியாகவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற செயலி மூலமும் விண்ணப்பம் செய்யலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின், கட்டணமில்லா தொலைபேசி எண் 044- 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்