மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு
15-Oct-2025
காஞ்சிபுரம்: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு பெற்றுள்ளனர். இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி ஈரோட்டில், அக்., 31, நவ 1., என, இரு நாட்கள் நடந்தது.இதில், மாநில முழுதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா பயிற்சி பள்ளியை சேர்ந்த 8 பேர் கராத்தே போட்டியில் பங்கேற்றனர். இதில், பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர் சிந்தன், 19-58 கிலோ எடை பிரிவிலும், மாமல்லன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர் லோகேஷ்வரன், 19- -45 கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற இருவருக்கும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி சான்றிதழை ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன் வழங்கினார். இதன் மூலம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க சிந்தன், லோகேஷ்வரன் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என, காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் பிரபாகரன், பயிற்சியாளர் அண்ணாமலை தெரிவித்தனர்.
15-Oct-2025