உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  2 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல்

 2 பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல்

காஞ்சிபுரம்: இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் இடமாறுதல் அளித்துள்ளார். காஞ்சிபுரம் கிராம ஊராட்சி நிர்வாகம் நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலராக பவானி என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு, அதே ஒன்றியத்தில், வட்டார நிர்வாகம் நிர்வகிக்கும், வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில், வட்டார நிர்வாகம் நிர்வகித்து வந்த, சாந்தி என்பவருக்கு, அதே ஒன்றியத்தில், கிராம ஊராட்சிகள் நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் இடமாறுதல் அளித்து உள்ளார். மாறுதல் அளிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக சேர வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை