உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2 பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல்

2 பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல்

காஞ்சிபுரம்,:இரு பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல் அளிக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பி.டி.ஓ., வரதராஜன் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு, குன்றத்துார் கிராம ஊராட்சிகளை நிர்வாகிக்கும் பி.டி.ஓ.,வாக இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குன்றத்துார் கிராம ஊராட்சிகளை நிர்வாகித்து வந்த பி.டி.ஓ., கண்ணன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ