மேலும் செய்திகள்
2 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
05-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை பகுதியில் சி.வி.எம்., அண்ணாமலை நகரில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, குடிமை பொருள் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவுலர் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை சென்றனர். அங்கு, மாலிக்பாஷா என்பவர் 2,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.
05-Mar-2025