உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விதிமீறி அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகளுக்கு அபராதம்

விதிமீறி அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகளுக்கு அபராதம்

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி வந்த மூன்று லாரிகள் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றியம், மதுார், சிறுதாமூர் உள்ளிட்ட பகுதிகளில், தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர், எம்.சாண்ட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, பழையசீவரம், வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனரக லாரிகள் மூலம் ஜல்லி, மணல் போன்ற கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் சில விதிமுறைகளை மீறி அதிக லோடு மற்றும் தார்ப்பாய் மூடாமல் இயக்கப்படுகின்றன. இதனால், எம்.சாண்ட் மணல் சாலைகளில் சிதறுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் அவதிபடுகின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து புகார் எழும்பியதை அடுத்து, வாலாஜாபாத் தாசில்தார் மோகன்குமார், வாலாஜாபாத் வருவாய் ஆய்வாளர் யோகராஜ் மற்றும் வாலாஜாபாத் போலீசார் உள்ளடங்கிய குழுவினர், நேற்று, வாலாஜாபாத் ரவுண்டனா சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதிக லோடு மற்றும் தார்ப்பாய் போர்த்தாமல் எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளை மடக்கி அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு மற்றும் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி சென்ற மூன்று லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, 47,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ