உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  3,000 மரக்கன்றுகள் மலையாங்குளத்தில் நடவு

 3,000 மரக்கன்றுகள் மலையாங்குளத்தில் நடவு

உத்திரமேரூர்: மலையாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,000 மரக்கன்றுகள், வனத்துறையினர் சார்பில், நேற்று நடப்பட்டன. உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு, வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. அந்த மரக்கன்றுகள் அரசு புறம்போக்கு நிலம், பள்ளி வளாகம், சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் நடப்பட்டு வருகின்றன. இதற்காக, பெருங்கோழி மத்திய நாற்றங்கால் பண்ணையில், கடந்த அக்டோபரில், 40,000 செடிகள் பதியம் செய்யப்பட்டன. அதில், நீர்மருது, மகாகனி, சவுக்கு, தேக்கு, காட்டுவாகை, பூவரசு ஆகிய மரக்கன்றுகளை வனத்துறையினர் பதியம் செய்தனர். தற்போது, மரக்கன்றுகள் 2 - 3 அடி வரை வளர்ந்து, நடவு செய்ய தயாராக உள்ளது. இந்நிலையில், மலையாங்குளம் பகுதியில், 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின், 50 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நடவு செய்ய, வனத்துறை சார்பில் சவுக்கு, காட்டுவாகை, தேக்கு, மகாகனி உள்ளிட்ட 3,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, இலவசமாக வழங்கப்பட்ட மரக்கன்றுகளை, மலையாங்குளம் விவசாயிகளின் நிலங்களில், உத்திரமேரூர் வனத்துறையினர் நேற்று நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ