4 துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம்
காஞ்சிபுரம், :நான்கு துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த சத்யா, மாவட்ட ஆய்வுக் குழு அலுவலராகவும், திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றிய ரவிச்சந்திரன், காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மாவட்ட ஆய்வுக் குழு அலுவலராக பணியாற்றி வந்த பாலமுருகன், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நிலம் பிரிவின் துணை கலெக்டராகவும், நிலம் பிரிவின் துணை கலெக்டர் ரமேஷ், தமிழக பாடநுால் கழகத்தின் உதவி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.