மேலும் செய்திகள்
உதவி பேராசிரியர் தேர்வு 266 பேர் பங்கேற்பு
20 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மூன்று மையங்களில் நேற்று நடந்த உதவி பேராசிரியர் தேர்வில், 46 பேர் 'ஆப்சன்ட்'ஆகினர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு கல்லுாரி மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியருக்கான தேர்வு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்தது. காலை 9:30 மணி முதல், 12:30 மணி பிற்பகல் வரையிலும், பிற்பகல் 3:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை என இரு தேர்வுகளாக நடந்தது. காஞ்சிபுரத்தில், ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு கா.மு.சு மேல்நிலைப் பள்ளி, சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று தேர்வு மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 614 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 46 பேர் தேர்வுக்கு வரவில்லை என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி தெரிவித்தார்.
20 hour(s) ago