ஸ்ரீபெரும்புதுாரில் 4.6 செ.மீ., மழை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. காஞ்சிபுரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் நேற்று கனமழை பெய்தது.அதிகபட்சமாக, ஸ்ரீபெரும்புதுாரில் 4.6 செ.மீ., மழை நேற்று மாலை 6:00 மணி வரை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 2.9 செ.மீ., மழையும், குன்றத்துாரில் 1.4. செ.மீ., மழையும், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாதில் 0.9 செ.மீ.., மழையும் பதிவாகி உள்ளது.காஞ்சிபுரம் நகரில் காலை முதல் மாலை வரை மழை விட்டு விட்டு பெய்ததால், நகரவாசிகளின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதித்தது.