மேலும் செய்திகள்
சொத்து கேட்டு மறியல்
29-Jun-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, இடப்பிரச்னையில், சித்தியை வெட்டி கொலை செய்த வாலிபர் உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது தம்பி துளசி ராமன். சகோதரர்களான இவர்கள், அதே கிராமத்தில், தனித்தனியாக வசித்து வருகின்றனர்.இரு குடும்பத்திற்கும் கால்நடைகளுக்கு கொட்டகை அமைப்பது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. நேற்று, காலை 6:00 மணியளவில், மீண்டும் தகராறு ஏற்பட்டு, சுப்பிரமணி மகன் துரை, 31, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து, சித்தி சுமதி, 39, என்பவரை, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.உறவினர்கள், சுமதியை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமதியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசில், சுமதியின் கணவர் துளசிராமன் அளித்த புகாரின்படி, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், துரை, அவரது தந்தை சுப்பிரமணி, 58, சகோதரர்கள் தனசேகரன், 35, ஸ்ரீதர், 34, தாய் சின்னபொன்னு, 55, ஆகிய ஐந்து பேரையும், நேற்று இந்த வழக்கில் கைது செய்தனர்.
29-Jun-2025