உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்குறை தீர் கூட்டம் 50 பேர் பங்கேற்பு

மின்குறை தீர் கூட்டம் 50 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.குறை தீர் கூட்டத்தில் 50 பேர் பங்கேற்றனர். இதில், நத்தாநல்லுார் கிராமத்தில் குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் வந்ததாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை