கோடையில் 52 சதவீதம் மழை பொழிவு அதிகம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் கனமழை பெய்வது வழக்கம். மாவட்டத்திற்கு தேவையான மழை, இந்த இரு மாதங்களிலேயே அதிகளவு பெய்யும்.கோடை, குளிர் காலங்களில் குறைவான அளவு மழை பெய்யும் என்பதால், இந்த காலங்களில் ஏரியில் தேங்கியிருக்கும் தண்ணீரை நம்பி விவசாயிகள், பாசனம் செய்கின்றனர். ஆனால், இந்தாண்டு கோடை காலத்திலேயே அதிக மழை பொழிந்துள்ளது.வானிலை ஆய்வு மையம் எடுத்த கணக்கெடுப்பின்படி, மார்ச் மாதம் முதல், மே மாதம் 28ம் தேதி வரையிலான மூன்று மாத கணக்கெடுப்பின்படி, 6.8 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 52 சதவீதம் கூடுதலாக பொழிந்து, 10.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.கோடையில் பரவலாக பல நாட்கள் மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் பல நாட்கள் குறைவாக காணப்பட்டன.