உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் ஏர்போர்ட் தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம்

பரந்துார் ஏர்போர்ட் தாசில்தார்கள் 7 பேர் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்துார் ஏர்போர்ட் திட்டத்தில், நில எடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த ஆறு தாசில்தார்கள் உட்பட ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறையின் கீழ் பணியாற்றும் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள், நிர்வாக காரணமாக பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நில எடுப்பு சம்பந்தமாக சிப்காட் மற்றும் பரந்துார் ஏர்போர்ட் நில எடுப்பு திட்டம் ஆகிய அலுவலகங்களில் பணியாற்றி வந்த ஏழு தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விபரம் பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் ஸ்ரீதர் பரந்துார் ஏர்போர்ட் திட்டம் எச்சூர் திட்டம், ஸ்ரீபெரும்புதுார் இந்திராணி பரந்துார் ஏர்போர்ட் திட்டம் எச்சூர் திட்டம், ஸ்ரீபெரும்புதுார் புவனேஸ்வரன் பரந்துார் ஏர்போர்ட் திட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் விரிவாக்கம் வாசுதேவன் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் விரிவாக்கம் பரந்துார் ஏர்போர்ட் திட்டம் பாலாஜி பரந்துார் ஏர்போர்ட் திட்டம் - அலகு 3 பரந்துார் ஏர்போர்ட் திட்டம் - அலகு 7 லோகநாதன் பரந்துார் ஏர்போர்ட் திட்டம் - அலகு - 2 பரந்துார் ஏர்போர்ட் திட்டம் - அலகு 4 மலர்விழி பரந்துார் ஏர்போர்ட் திட்டம் மண்டலம் - 2 ,- அலகு - 4 பரந்துார் ஏர்போர்ட் திட்டம் மண்டலம் - 1,- அலகு -4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !