உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிவாரண முகாம்களில் தங்கிய 715 பேர் வீடு திரும்பினர்

நிவாரண முகாம்களில் தங்கிய 715 பேர் வீடு திரும்பினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக, மாவட்டம் முழுதும் கனமழை பெய்தது. குன்றத்துார், ஸ்ரீபெரும் புதுார் மற்றும் காஞ்சி புரம் மாநகராட்சி ஆகியபகுதிகளில், பல்வேறு குடியிருப்புகள் நீரில் மூழ்கி, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்ட அரசு அதிகாரிகள், அருகே உள்ள தற்காலிக மழை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, பாய், போன்ற பொருட்கள்வழங்கப்பட்டன.மாவட்டம் முழுதும், அதிகபட்சமாக இரு நாட்களில், 31 மழை நிவாரணமுகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 804 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.நேற்று மழை குறைந்ததால், 31 முகாம்களில் இருந்த 715 பேர் வீடு திரும்பினர். காஞ்சிபுரம் மாநராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு அரசு துவக்கப் பள்ளியில்மட்டும், 89 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் தங்கியுள்ளோர் வீடு திரும்பினால், இன்று பள்ளி செயல்பட வாய்ப்பு இருப்பதாகஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை