உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் வெள்ளம் பாதிக்கும் 72 இடங்களில்...முன்னேற்பாடு!:வடகிழக்கு பருவமழைக்கு மாவட்ட நிர்வாகம் தயார்

காஞ்சியில் வெள்ளம் பாதிக்கும் 72 இடங்களில்...முன்னேற்பாடு!:வடகிழக்கு பருவமழைக்கு மாவட்ட நிர்வாகம் தயார்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிக்கும் 72 இடங்கள், அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தடுப்பு பணிகளுக்காக 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ள 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2015ல் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் சேதமடைந்தன. மேலும், ஏராளமான மனித உயிரிழப்புகளும், நீர்நிலைகளில் சிக்கி கால்நடைகளும் உயிரிழந்தன. இந்த மோசமான பாதிப்பால் ஏற்பட்ட அனுபவத்தில், 2016ம் ஆண்டு முதல், வெள்ள பாதிப்பு இடங்களை வகைப்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ரூ.500 கோடி செலவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூடுகால்வாய் அமைப்பது, சிறுபாலம் கட்டுவது, அடையாறை அகலப்படுத்துவது என, மழை வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, 500 கோடி ரூபாய் மேலாக செலவிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் வெள்ள பாதிப்பை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது.இந்தாண்டு, வடகிழக்கு பருவமழை பாதிக்கும், 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடக்கின்றன.இதற்கான முதற்கட்ட ஆய்வு கூட்டம், அமைச்சர் அன்பரசன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. மழை நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தெளிவாக அதிகாரிகள் இக்கூட்டத்தில் கூறினர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், மரம் அறுக்கும் இயந்திரம், லைப் ஜாக்கெட், பொக்லைன், ஜே.சி.பி., உள்ளிட்ட, 24 வகையான, மழை மீட்பு உபகரணங்களை தயார்படுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பாக, மாநகராட்சியில் உள்ள கால்வாய்களை துார்வார திட்டமிட்டுள்ளனர்.மழை பாதிப்பு இடங்களில் பணியாற்ற, 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ள 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு மண்டல குழுவிலும், மின் வாரியம், போலீஸ், தீயணைப்பு, வருவாய் துறை, உள்ளாட்சி அலுவலர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.பருவமழை தீவிரமடையும் நாட்களில், 11 துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்தில் 24 மணி நேரமும் தயாராக இருப்பர்.

18 இடங்களில் மழைமானி

தமிழகம் முழுதும் தானியங்கி மழைமானி மற்றும் தானியங்கி வானிலை பதிவு கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இவை இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. ஒரு சில நாட்களில் இம்மையங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனவும், வரக்கூடிய பருவமழைக்கு இந்த நவீன மழைமானி, வானிலை பதிவு கருவி பயன்படும் என, பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 இடங்களில் தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டுள்ளன. மேலும், உத்திரமேரூர் வேடபாளையம், ஸ்ரீபெரும்புதுார் சிவன்தாங்கல், வாலாஜாபாத் தாலுகா அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில், தானியங்கி வானிலை பதிவு கருவி பொருத்தப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழையால் பாதிக்கும் இடங்கள், குன்றத்துார் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் அதிகம் உள்ளன. இதன் காரணமாகவே, படப்பை குறுவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் சுற்றியுள்ள இடங்கள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளன.

மிக அதிகம் பாதிப்புள்ளாகும் இடங்கள் -- 3

வரதராஜபுரம் (படப்பை பிர்கா), மெளலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி அதிக பாதிப்புக்குள்ளாகும் இடம் - 20* காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாரதி நகர், உப்பேரிக்குளம், வெள்ளக்குளம், ஆவாக்குட்டை, நாகலுத்து மேடு, கே.எம்.வி.,நகர், சித்தி விநாயகர் பூந்தோட்டம், தேனம்பாக்கம் இந்திரா நகர், அண்ணா நகர், எம்.ஜி.ஆர்.,நகர், காமாட்சியம்மன் காலனி, அதியமான் நகர்.* வாலாஜாபாத் தாலுகாவில், திம்மையன்பேட்டை, வாலாஜாபாத் டவுன்.* குன்றத்துார் தாலுகாவில், சேத்துப்பட்டு இருளர் காலனி, அம்பேத்கர் நகர், மலையம்பாக்கம் தாங்கல்; மாங்காடு நகராட்சியில், ஜனணி நகர், ஸ்ரீனிவாசன் நகர், காமாட்சி நகர்.

பருவமழைக்கு தயாராக உள்ள உபகரணங்கள்

ஜெனரேட்டர் 56மரம் அறுக்கும் இயந்திரம் 69மணல் மூட்டை பைகள் 13,505மணல் மூட்டைகள் 12,555சவுக்கு கட்டைகள் 3880ஜேசிபி 60பொக்லைன் 6லைப் ஜாக்கெட் 108மோட்டார் பம்பு 115டார்ச் லைட் 88பிளீச்சிங் பவுடர் 21,725 கிலோரப்பர் படகு 4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !