உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முதல் நாளில் 807 பேர் பங்கேற்பு

காஞ்சியில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முதல் நாளில் 807 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பிப்.,6 ம் தேதி முதல் 15ம் தேதி வரை, இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணியை நடத்துவதாக, சென்னையின் ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகம் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, இதில் அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், சிப்பாய் பார்மசி, சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வு நடைபெறுகிறதுதமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் இந்த ஆள்சேர்ப்பு பணிக்கு அந்தந்த பொருந்தக்கூடிய தகுதி அளவுகோல்களின்படி பதிவு செய்ய அறிவிக்கப்பட்டது. www.joinindianarmy.nic ல் பதிவேற்றிய விண்ணப்பதாரர்கள், காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு தேர்வில் நேற்று கலந்து கொண்டனர்.உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை ராணுவ அதிகாரிகள் சரிபார்த்து, மைதானத்துக்குள் ராணுவ அதிகாரிகள் விண்ணப்பதாரர்களை அனுமதித்தனர். தமிழகத்தின் 12 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவோ அல்லது ஆட்சேர்ப்பு தேர்வு பணியை புகைப்படம் எடுக்கவோ ராணுவ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.முதல் நாளான நேற்று திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் 1,007 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 808 பேர் பங்கேற்க வந்திருந்தனர். அதில் ஒருவர் தனது உடலில் டாட்டூ குத்தியிருந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். மற்ற 807 பேருக்கு உடல் தேர்வு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை