உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஸ்கூட்டர், செயற்கை கை, கால்கள் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் 96 பேர் கலெக்டரிடம் மனு

 ஸ்கூட்டர், செயற்கை கை, கால்கள் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் 96 பேர் கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், செயற்கை கை, கால்கள், பட்டா, காதொலி கருவி என, பல்வேறு தேவைகள் குறித்து, 96 மாற்றுத்திறனாளிகள், குறைதீர் கூட்டத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் நேற்று மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வேண்டியும், செயற்கை கை மற்றும் கால்கள் வேண்டியும், மூன்று சக்கரவண்டி, வீட்டுமனைப் பட்டா, காதொலி கருவி, தையல் இயந்திரங்கள் மற்றும் சொந்த தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகள் கோரி என, 96 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் வழங்கி, விரைவாக நடவடிக்கை களை எடுக்க அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து, 4 மாற்றுத் திறனாளிகளுக்கு, 12,000 ரூபாய் மதிப்பிலான காதொலிக் கருவியும், ஒருவருக்கு ஈமச்சடங்கு உ தவித்தொகையும், மூன்று சக்கர வண்டியும் என மொத்தம் 1,43,500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி களை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் மலர்வி ழி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ