உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கனரக வாகனம் உரசி தகர்ந்தது நிழற்குடை

கனரக வாகனம் உரசி தகர்ந்தது நிழற்குடை

காஞ்சிபுரம்,மருதம் கூட்டு சாலையில் இருந்து, புத்தகரம் கிராமம் வழியாக ஊத்துக்காடு கிராமத்திற்கு செல்லும் சாலை செல்கிறது.இச்சாலை, முதல்வர் சாலைகள் மேம்பாடு திட்டத்தில், சமீபத்தில் தார் சாலையாக செப்பணிடப்பட்டது.வாலாஜாபாதில் இருந்து சென்னைக்கு செல்வோர், கரூர், ராஜகுளம் வழியாக செல்கின்றனர். சிறிய கார் முதல், கனரக வாகனங்கள் வரையில் செல்கின்றன.புத்தகரம் கிராமத்தில் இரு இடங்களில், குறுகிய வளைவுகளாக இருப்பதால், கனரக வாகனங்கள் செல்லும் போது, சாலையோர கட்டடங்கள் சேதம் ஏற்படுகின்றன.குறிப்பாக, கடந்த வாரம் கனரக வாகனம் சென்ற போது, புத்தகரம் நிழற்குடை கட்டடம் மீது உரசியதில் கட்டடம் முழுதும் சேதம் ஏற்பட்டுள்ளது.இதனால், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் நிழற்குடையில் ஒதுங்க முடியவில்லை என, புலம்பி வருகின்றனர்.எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடைக்கு பதிலாக புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ