உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கழிப்பறை

பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கழிப்பறை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, வண்ணாரக்குளம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக, 10 ஆண்டுக்கு முன் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.தற்போது, கழிப்பறை முறையான பராமரிப்பு இல்லாமல், திறந்த நிலையில் உள்ளது. மேலும், தண்ணீர் வசதி ஏதும் இல்லாமல், குழாய்கள் சேதமடைந்தும் உள்ளன.தொடர்ந்து, கழிப்பறையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதிலிருந்து, விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.கழிப்பறையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே, பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள கழிப்பறையை விரைந்து சீரமைக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை