உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை

வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேருந்து நிலையம் முன், எதிரே மற்றும் அம்பேத்கர் சிலை எதிரே, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 49 லட்சம் செலவில், கடந்தாண்டு அக்டோபரில் மூன்று பயணியர் நிழற்குடை திறக்கப்பட்டது.இந்நிலையில், பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் நிழற்குடையை, வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, பயணியர் நிழற்குடையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பேருந்துக்காக வரும் பயணியர், நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், வெயில் மற்றும் மழை நேரங்களில் பயணியர் சாலையிலே நிற்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது.எனவே, பயணியர் நிழற்குடையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, பேரூராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:பயணியர் நிழற்குடையில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, பயணியர் நிழற்குடையில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய, உத்திரமேரூர் காவல் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை