மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
23-Aug-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உப சன்னிதிகளான வேணுகோபாலன், வராகர், ரங்கநாதனர், திருவனந்தாழ்வார், கருமாணிக்க வரதர் ஆகிய 5 சன்னிதிகளின் பாலாலயம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உப சன்னிதிகளின் திருப்பணி உபயதாரர் நிதி மூலம் துவங்க உள்ளது. இதையொட்டி, ஐந்து சன்னிதிகளுக்கும் பாலாலயம் நேற்று நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டு, பெருமாள் திருவாராதனம், காலை 8:30 மணிக்கு கலாகர்ஷணமும், தொடர்ந்து யாகசாலை, பூர்ணாஹூதியும், காலை 10:00 மணிக்கு துலா லக்னத்தில் ப்ரோக்ஷ்ணமும், 11:00 மணிக்கு சாற்றுமறை, தீர்த்தம் கோஷ்டி நடந்தது.
23-Aug-2025