உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம்

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் நத்தப்பேட்டையில் இருந்து முத்தியால்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்கே, மாருதி நகரை ஒட்டியுள்ள பகுதியில், மழைநீர் கால்வாய் செல்லும் இடத்தில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.இப்பாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சிறுபாலத்தை ஒட்டியுள்ள கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சிறுபாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை