மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
26-Jun-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் யதோக்தகாரி வடக்கு மாட வீதியில்,மாகாளியம்மனுக்கும், கன்னியம்மனுக்கும் மூன்றாம் ஆண்டு ஆடித் திருவிழா நாளை துவங்குகிறது.காஞ்சிபுரம் யதோக்தகாரி வடக்கு மாட வீதி, மாகாளியம்மனுக்கும், கன்னியம்மனுக்கும் நடப்பாண்டிற்கான ஆடித் திருவிழா நாளை, காலை 10:00 மணிக்கு பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்குகிறது.வரும் 18ம் தேதி மாலை, ஜலம் திரட்டும் நிகழ்வும், 20ம் தேதி காலை 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், காலை 11:30 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 9:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பும் நடக்கிறது.
26-Jun-2025