உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொன்னியம்மனுக்கு நாளை ஆடி திருவிழா

பொன்னியம்மனுக்கு நாளை ஆடி திருவிழா

அய்யங்கார்குளம்:அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மனுக்கு, நாளை, ஆடி திருவிழா நடக்கிறது.காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள கிராம தேவதைகளான கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோவில்களில் ஆடி திருவிழா, நாளை, நடக்கிறது.விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு இரு கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.பிற்பகல் 12:00 மணிக்கு பொன்னியம்மன் அன்னதான குழுவினரால், சுந்தர விநாயகர் கோவில் அருகில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட உள்ளது.மாலையில், பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வர உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை