மேலும் செய்திகள்
மாதிரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
08-Jul-2025
உத்திரமேரூர்,காவனுார் புதுச் சேரியில் உள்ள மாரி எல்லையம்மனுக்கு ஆடிப் பூரத்தை முன்னிட்டு, பால்குட அபிஷேகம் நடந்தது. உத்திரமேரூர் தாலுகா, காவனுார் புதுச்சேரியில் மாரி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின், பிற் பகல் 12:30 மணிக்கு காளியம்மன் கோவிலில் இருந்து, விரதமிருந்த பக்தர்கள் 108 பால்குடம் எடுத்துச் சென்றனர். பின், பக்தர்கள், மாரி எல்லையம்மன் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து, மாலை 3:00 மணிக்கு மாரி எல்லையம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது.
08-Jul-2025