உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதில் வீடுகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

வாலாஜாபாதில் வீடுகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகப்பேட்டையில், நாவலர் நெடுஞ்செழியன் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலைத் தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க பொருத்தப்பட்டுள்ள, 11 கே.வி., திறன் கொண்ட மின் கம்பிகள், வீடுகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளன.இதனால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மின் விபத்து ஏற்படக்கூடும் என தொடர்ந்து புகார் அளித்ததையடுத்து, வீடுகளுக்கு மாற்று முறையில் மின் இணைப்பு வழங்க நிலத்தடியில் கேபிள் ஒயர்கள் புதைக்கப்பட்டது.எனினும், அக்கேபிள் வாயிலாக மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால், வீடுகளுக்கு மேல் செல்லும் உயர் அழுத்தம் மின் கம்பிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என அப்பகுதியினர் அச்சத்துடன் வசிக்கின்றனர்.இதுகுறித்து, மின்வாரிய காஞ்சிபுரம் வட்ட மேற்பார்வையாளரிடத்தில் இயக்குதலும், பராமரித்தலும், அப்பகுதியினர் சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.அதில், நாவலர் நெடுஞ்செழியன் நெடுஞ்சாலை தெருவில் வீடுகளுக்கு மேலே செல்லும் பழைய உயர் மின் கம்பிகளை அகற்ற பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கபடாமல் உள்ளது.எனவே, நாவலர் நெடுஞ்செழியன் நெடுஞ்சாலை தெருவில், மின்மாற்றி அருகில் உள்ள கேபிள்களில், குறிப்பாக காவலர் குடியிருப்பு வரை உள்ள 20 வீடுகளுக்கு மத்தியில் செல்லும் மின் கம்பிகளை அகற்றி, நிலத்தில் புதைக்கப்பட்ட கேபிள்கள் வாயிலாக மின் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ