உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்

சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரங்களில், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் ஆறுவழி நெடுஞ்சாலை, 25 கி.மீ., உடையது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன் படுத்தி வருகின்றனர். தவிர, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில், தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் தொழிற்சாலைக்கு வரும் கன்டெய்னர் வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். நெடுஞ்சாலையில் வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்களால், சாலையின் அகலம் குறைந்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் நிற்கும் வாகனங்கள் மீது, அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சாலையோரம் நிறுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ