உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாறுமாறாக திரும்பும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்

தாறுமாறாக திரும்பும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, ஒரகடம் வழியாக, சிங்கபெருமாள் கோவில், குன்றத்துார், மணிமங்கலம், தாம்பரம் செல்லும் சாலைகள் பிரிந்து செல்கின்றன.ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஒரகடம் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் மையப் புள்ளியாக இந்த சந்திப்பு உள்ளதால், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியே சென்று வருகின்றன.தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மார்க்கமாக இருந்து வரும் வாகனங்கள், வலதுபுறம் திருப்பி, குன்றத்துார் செல்கின்றன. அதேபோல, வல்லம் வடகால், ஒரகடம், சிங்கபெருமாள் கோவில் செல்லும் வாகனங்கள், 'யூ- டர்ன்' எடுத்து சென்று வருகின்றன.இந்த நிலையில், இந்த சந்திப்பில் தாறுமாறாக சாலையில் திரும்பும் வாகனங்களால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.எனவே, அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி