உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை

அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, உர தட்டுப்பாடு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட வேளாண் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர்முருகன் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், விவசாயிகள் நவரை பருவத்தில் சாகுபடி செய்வதற்கு தேவையான உரம், தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் உரம் இருப்பு உள்ளன.அதன்படி, 4,166மெட்ரிக் டன் யூரியா, 633 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 292 மெட்ரிக் டன்பொட்டாஷ், 140 மெட்ரிக் டன் பாஸ்பேட் மற்றும் 1,889 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பு உள்ளன. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டி.ஏ.பி., உரத்தின் மூலப்பொருட்கள்விலை அதிகரித்துவருகிறது.இந்த உரத்திற்கு பதிலாக, சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்தி பயனடையலாம். பயிருக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்துகள் கிடைக்கும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை