உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவிக்கு லவ் டார்ச்சர் துணை நடிகர் ஏஜன்ட் கைது

மாணவிக்கு லவ் டார்ச்சர் துணை நடிகர் ஏஜன்ட் கைது

சென்னை: இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய, சினிமா துணை நடிகர் ஏஜன்ட் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண்; இன்ஜினியரிங் மாணவி. குடும்ப சூழ்நிலை காரணமாக, சினிமா துறையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, சினிமா படப்பிடிப்பிற்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து தரும் ஏஜன்டான ரிஷிவிக்ரமன், 26 என்பவர் பழக்கமாகி உள்ளார். கடந்த நான்கு மாதங்களாக அவரை காதலித்து வந்தார். பின், அவரது நடவடிக்கை சரியில்லாததால், மாணவி பேசுவதை தவிர்த்து விட்டார். இந்த நிலையில், கடந்த 25ம் தேதி அப்பெண், வீட்டிற்கு செல்ல மதுரவாயல் அணுகு சாலை வழியாக நடந்து சென்றார். அங்கு வந்த ரிஷிவிக்ரமன், மீண்டும் காதலிக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு மாணவி மறுக்கவே, அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய ரிஷிவிக்ரமன் கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது குறித்து விசாரித்த மதுரவாயல் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ராயபுரம், கிரேஸ் கார்டனைச் சேர்ந்த ரிஷிவிக்ரமனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ