மேலும் செய்திகள்
குட்கா விற்ற பெண் கைது
29-Aug-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், உத்திரமேரூர் வட்டக் கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலர் தட்சிணாமூர்த்தி தலைமையில், நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து, '100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும். தினக்கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆண்டிற்கு வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக உயர்த்த வேண்டும்' என்பன உள்ளிட்ட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
29-Aug-2025