உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சிபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

 காஞ்சிபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஓ.,க்களை மிரட்டும் தி. மு.க.,வினரை கண்டித்து, காஞ்சிபுரத்தில் இன்று அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தி.மு.க.,வினர், ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் பி.எல்.ஓ.,க்களை மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்டும் காணாமலும் இருக்கும் தி.மு.க., அரசை கண் டித்து, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், இன்று காலை 10:00 மணியளவில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும். முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்த ரம் உ ள்ளிட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ