உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆம்பாக்கம் குறுங்காட்டில் சிறிய குளம் அமைப்பு

ஆம்பாக்கம் குறுங்காட்டில் சிறிய குளம் அமைப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வராணவாசி ஊராட்சிக்கு உட்பட்டது ஆம்பாக்கம் கிராமம்.இக்கிராமத்தில், விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு குறுங்காடு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக ஒரகடம் பாஷ் இந்தியா பவுண்டேஷன் சமூகப் பொருப்பு நிதி மூலம், வில்வம், மகாகணி, புங்கன், பூவரசன், வேம்பு, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மரங்கள் மற்றும் நாவல், மா, பலா, கொய்யா போன்ற பழ வகை என மூன்றரை ஏக்கரில் 1,150 மரங்கள் நடப்பட்டுள்ளது. இக்குறுங்காடு பகுதிக்கு உணவுத் தேடி வரும் பறவைகளின் தாகம் தீர்க்கும் நோக்கில், விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் சமீபத்தில் சிறு அளவிலான குட்டை ஏற்படுத்தப்பட்டது.அந்த நீர்த்தேக்க பகுதியில் தற்போது தாமரை செடி வளர்ந்து பூக்கள் பூத்து ரம்மியாக காட்சி அளிக்கிறது. இந்த நீர்த்தேக்கப் பகுதியில், நிலத்தடி நீர்மட்ட நீரூற்று வளமாக உள்ளதால், பெரிய அளவிலான குளம் ஏற்படுத்த இயற்கை ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை