உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கல்

காஞ்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்கல்

காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு பிரிவு, பொது மருத்துவ பிரிவு என பல்வேறு சிகிச்சைகளுக்கு ஆம்புலன்ஸ் தேவை உள்ளது. இருப்பினும், நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், ஆம்புலன்ஸ் தேவையும் அதிகரித்துள்ளது.எனவே, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து, ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் வழங்கியது.வாகனத்தை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோபிநாத், ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை