உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயில்வே சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்

ரயில்வே சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காகவும், உயிருக்கு போராடும் நோயாளிகள், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் வாயிலாக மருத்துவமனைக்கு வருகின்றனர்.மருத்துவமனை அமைந்துள்ள ரயில்வே சாலை, ராஜாஜி மார்க்கெட் அருகில், பூ, பழம், காய்கறி வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால், இப்பகுதியில் சாலையின் அகலம் குறைந்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், இவ்வழியாக செல்லும், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனமும் நெரிசலில் சிக்குவதால், உயிருக்கு போராடும் நோயாளிகளை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தாமதமாக செல்வதால், உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, ராஜாஜி மார்க்கெட் அருகில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாவட்ட போலீசாரும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை