உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி சேவை மையத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

ஊராட்சி சேவை மையத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திணையாம்பூண்டி ஊராட்சியில், பெரிய ஆண்டித்தாங்கள், நெமிலிபட்டு, சின்ன ஆண்டித்தாங்கள், முருக்கேரி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.இங்குள்ள, முருக்கேரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்தது.இதனால், பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டி வந்தனர். மேலும், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடம், நான்கு ஆண்டுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது.இந்நிலையில், தற்காலிகமாக அங்கன்வாடி மையம், அப்பகுதியில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல், குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, முருக்கேரியில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ