உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கச்சபேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் நியமனம்

கச்சபேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் நியமனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவில் செயல் அலுவலராக திவ்யா நியமிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் செயல் அலுவலராக ராஜமாணிக்கம் என்பவர் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். சென்னை பைராகி மடம் என்கிற வெங்கடேசப் பெருமாள் கோவில், 2ம் நிலை செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த திவ்யா என்பவரை, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் செயல் அலுவலராக அத்துறை நிர்வாகம் நேற்று நியமித்துள்ளது. திவ்யா. விரைவில், பொறுப்பேற்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி