உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அஷ்டபுஜ பெருமாள் கோவில் உண்டியல் வருவாய் ரூ.5.66 லட்சம்

அஷ்டபுஜ பெருமாள் கோவில் உண்டியல் வருவாய் ரூ.5.66 லட்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 5 லட்சத்து 66,792 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, கோவிலில் உள்ள மூன்று உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், ஹிந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளர் அலமேலு முன்னிலையில், பக்தர்கள், பச்சையப்பன் மகளிர் கல்லுாரி மாணவியர், தன்னார்வலர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் வாயிலாக எண்ணப்பட்டது. இதில், மொத்தம் 5 லட்சத்து 66,792 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை