டி.டி.இ.,யின் கையில் நறுக் அசாம் வாலிபருக்கு காப்பு
சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில், நடைமேடை டிக்கெட் கேட்ட பரிசோதகர் கையை கடித்த அசாம் மாநில வாலிபரை, ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான், 27. சென்னை வந்த இவர், கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர், நேற்று பெரம்பூர் ரயில் நிலையத்தில், முதல் நடைமேடை யில் அமர்ந்து கொண்டிருந்தார். இவரிடம், சாரதா உள்ளிட்ட டிக்கெட் பரிசோதகர்கள், நடைமேடை டிக்கெட் கேட்டுள்ளனர். டிக்கெட் எதுவும் எடுக்காத அப்துர் ரஹ்மான், அவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், கோபமடைந்த அப்துர் ரஹ்மான், சாரதாவின் கையை கடித்து தாக்கியுள்ளார். இதையடுத்து, சாரதா அளித்த புகாரின்படி, பெரம்பூர் ரயில்வே போலீசார், அப்துர் ரஹ்மானை கைது செய்து, அவரது பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.