உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அவளூர் பாலாற்றில் அவலம் குப்பை கொட்டி சீரழிவு

அவளூர் பாலாற்றில் அவலம் குப்பை கொட்டி சீரழிவு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமம் உள்ளது. அவளூர் கிராம பாலாற்றங்கரையொட்டி, அப்பகுதியை சேர்ந்த சிலர், உணவகம், இறைச்சி உள்ளிட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.இந்த கடைகள் மற்றும் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் குப்பை கழிவுகளை, சமீப காலமாக அவளூர் பாலாற்று படுகையில் கொட்டி வருகின்றனர். மேலும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மதுபிரியர்கள் பலர், அவளூர் பாலாற்றில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.அப்போது, அவர்களும் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்கின்றனர். இவ்வாறு பாலாற்றில் குவிக்கப்படும் குப்பை கழிவுகள், காற்று அடிக்கும் போது, காற்றின் திசையில் ஆறு முழுதும் பரவி மாசு ஏற்படுகிறது. இதனால், பாலாற்றின் மண்வளம் மற்றும் நீர்வளம் பாதிக்கும் அபாயம் உள்ளது.எனவே, அவளூர் பாலாற்று படுகையை மாசுபடுத்துவதை தவிர்க்கும் வகையில், குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி