உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசை

முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆவணி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை, 10:00 மணி அளவில், கிராம தேவதையான பொன்னியம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி மற்றும், மாலை 3:00 மணி அளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தன.அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், இரவு 8:00 மணி அளவில் முத்துமாரியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ