உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இயற்கை விவசாயம் குறித்து மகளிர் குழுவினருக்கு விழிப்புணர்வு

இயற்கை விவசாயம் குறித்து மகளிர் குழுவினருக்கு விழிப்புணர்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில், சகாய தோட்டம் தொன் போஸ்கோ வேளாண்மை கல்லுாரி சார்பில், இயற்கை விவசா யம் குறித்து, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், இயற்கை உரங்களான பஞ்ச காவ்யா, கற்பூர கரைசல், ஜீவாமிர்தம், மீன் அமிலம், முட்டை அமிலம், வாழைப்பழ கரைசல் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்யப்பட்டது.மேலும், இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இயற்கை விவசாயி சுரேந்தர், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி