உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழங்குடியினருக்கு விழிப்புணர்வு

பழங்குடியினருக்கு விழிப்புணர்வு

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கம் கிராமத்தில் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில், பழங்குடியினருக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. குழந்தைகள் கண்காணிப்பகம் நிர்வாகி ராஜீ தலைமை வகித்தார். அதில், வீட்டில் குழந்தை பிறந்தால் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும், மருத்துவமனையில் குழந்தை பிறந்தால் எவ்வாறு பிறப்பு சான்றிதழ் பெறுவது என்பது குறித்தும், பழங்குடியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !